மாமல்லபுரத்தில் 25-ம் தேதி தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம்?


மாமல்லபுரத்தில் 25-ம் தேதி தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம்?
x

தவெகவில் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

சென்னை,

தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. ஆளும் கட்சிக்கு முன்னரே முந்தி கொண்ட பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தேர்தல் பிரசார தேரை ஓட்ட தொடங்கி விட்டார்.

அதே சமயத்தில், மகளிருக்காக செயல்படுத்திய திட்டங்கள் உள்பட தாங்கள் கொண்டு வந்த முக்கிய திட்டங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதால், ஆளும் கட்சியான தி.மு.க. நிச்சயம் வருகிற தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது. இருந்தாலும், ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.

இதைபோல பிரபல நடிகர் விஜய் புதிதாக தொடங்கிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் களம் காண இருக்கிறது. நடிகர் விஜய் நடத்தி வரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஆளுங்கட்சியான தி.மு.க.வும், ஆண்ட கட்சியான அ.தி.மு.க.வும் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், நடிகர் விஜய்யோ, சாத்தியமான திட்டங்களை மட்டுமே மக்களுக்காக நிறைவேற்றுவோம் என்று கூறியிருக்கிறார். மேலும் தவெகவில் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வருகிற 25-ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்திற்கு விஜய் தலைமை தாங்குவார் என கூறப்படுகிறது. கடைசியாக கட்சியின் கிறிஸ்துமஸ் விழாவுக்குப் பிறகு எந்த நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கவில்லை. ஜனநாயகன் சென்சார் பிரச்சினை, சிபிஐ விசாரணை குறித்தும் அவர் அமைதி காக்கும் நிலையில், எதிர்வரும் இக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேச உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 More update

Next Story