தவெகவுக்கு வாக்களித்ததை வீடியோ எடுத்து பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை; தேர்தல் அதிகாரி அதிரடி

விசில் சின்னத்திற்கு வாக்களித்ததை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.
 தவெகவுக்கு வாக்களித்ததை வீடியோ எடுத்து பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை;  தேர்தல் அதிகாரி அதிரடி
Published on

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது. அப்போது வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போனை வாக்குச்சாவடிக்கு வெளியே வைத்து பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் தேர்தல் துறையின் உத்தரவை மீறி சிலர் செல்போனை வாக்குச்சாவடிக்குள் எடுத்து சென்று த.வெ.க.வுக்கு விசில் சின்னத்தில் தங்களது வாக்குகளை பதிவு செய்தல், .வி.பாட் எந்திரத்தில் விசில் சின்னம் வருவது வரை வீடியோவாக செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும் , மாவட்ட கலெக்டருமான குலோத்துங்கனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர் இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com