"விஜய்யை விட நடிகர் அஜித்துக்கு 2 மடங்கு கூட்டம் வரும்.."- செல்வப்பெருந்தகை விமர்சனம்

நடிகரை பார்க்க வரும் கூட்டம் வாக்குகளாக மாறாது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
"விஜய்யை விட நடிகர் அஜித்துக்கு 2 மடங்கு கூட்டம் வரும்.."- செல்வப்பெருந்தகை விமர்சனம்
Published on

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது எங்களுடைய தலைவர் ராகுல்காந்தி கேரள சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். அவர், தமிழ் நாட்டுக்கு விரைவில் வருவார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்தும், தனியாகவும் பிரசாரம் மேற்கொள்வார். அதே போன்று பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கேவும் தமிழ் நாட்டில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார்கள். அவர்களும் மிக விரைவில் வருவார்கள். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

அதனை தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட விஜய்யை பார்க்க மிகப்பெரிய கூட்டம் கூடியதை எப்படி பார்க்கிறீர்கள்? என்று நிருபர்கள் கேட்டதற்கு, 'நடிகரை பார்க்க யார் வேண்டு மென்றாலும் வருவார்கள். அஜித் வந்தால் இதைவிட 2 மடங்கு கூட்டம் வரும். ரஜினிகாந்த் வந்தால் 3 மடங்கு கூட்டம் வரும். கூட்டம் வந்து வாக்குகளாக மாறாது. இதற்கு சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் உதாரணம். என்று பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com