திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் சத்யராஜ் பிரசாரம்

நடிகர் சத்யராஜ் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் சத்யராஜ் பிரசாரம்
Published on

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சத்யராஜ் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இது தொடர்பாக திமுக தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் - 2026 தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் சத்யராஜ்யின் தேர்தல் பிரசாரச் சுற்றுப்பயணம் விவரம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com