தி.மு.கவை வீட்டிற்கு அனுப்ப கூடிய ஒரே சக்தி அ.தி.மு.க. கூட்டணி தான்; டி.டி.வி.தினகரன் பேச்சு

தி.மு.க. என்கிற தீயசக்தியை வீட்டிற்கு அனுப்பக்கூடிய ஒரே சக்தி அ.தி.மு.க. கூட்டணி தான் என அ.ம.மு.க. வேட்பாளர் வேலு.கார்த்திகேயனை ஆதரித்து டி.டி.வி.தினகரன் பேசினார்.
தி.மு.கவை வீட்டிற்கு அனுப்ப கூடிய ஒரே சக்தி அ.தி.மு.க. கூட்டணி தான்; டி.டி.வி.தினகரன் பேச்சு
Published on

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த திருவையாறு தேரடியில் திருவையாறு தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் வேலு.கார்த்திகேயனை ஆதரித்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரித்து குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- ​நமது திருவையாறு பகுதி மக்கள் எத்தனை முறை தான் தி.மு.க.விற்கே ஓட்டுப்போட்டு சலிச்சுப்போயிருப்பீங்க? என்னங்க வந்திருக்கு தி.மு.க.ஆட்சியில். மு.க.​ஸ்டாலினும், அவரது பையன் குட்டி ஸ்டாலினும் வந்து அதை செய்தோம். இதை செய்தோம். அதுவும் செங்கலை தூக்கிட்டு வந்தாரே எய்ம்ஸ் கட்டவில்லை என்று. ஆனால் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது 11 மருத்துவக்கல்லூரிகள் தமிழ்நாட்டிற்கு வந்தது.

​இப்போது இவங்க அப்பா ஆட்சியில் எத்தனை மருத்துவக்கல்லூரி வந்துச்சுன்னு நீங்கள் கேட்கணும். அவங்க குடும்பம் வேண்டும் என்றால் மருத்துவக்கல்லூரியை வேற மாநிலத்துல திறந்திருக்கலாமே தவிர, அவர்களுக்கு வேண்டியவர்கள் திறந்திருக்கலாம். நீட்டை எங்க அப்பா ரத்து செஞ்சுருவார் என்று குட்டி ஸ்டாலின் சொன்னாரு. இன்னும் பேனாவே கிடைக்கவில்லையோ. மக்களை ஏமாத்துவதற்காக எதை வேண்டுமானாலும் சொல்றது. ​

பழைய தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றவில்லை. ஆனால் இப்போது புதிய தேர்தல் வாக்குறுதியை தைரியமாக கொடுக்குறாங்க பாருங்க. காரணம் உங்களை எல்லாம் விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். ரூ.1000, ரூ.2 ஆயிரம் என பணத்தை மக்களிடம் கொடுத்துவிட்டால், கையில் பணத்தை வாங்கிட்டோமே என சொல்லி ஓட்டுப் போடுறாங்க. அந்த பணம் எல்லாம் எங்கிருந்து வந்துச்சு? அண்ணன் எடப்பாடியார் ஆட்சியில் தான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக நமது டெல்டா பகுதி அறிவிக்கப்பட்டது. இல்லையென்றால் இங்கெல்லாம் தொழிற்சாலைகள் வந்திருக்கும். தி.மு.க. என்கிற தீய சக்தியை வீட்டிற்கு அனுப்பக்கூடிய ஒரே சக்தி அ.தி.மு.க. கூட்டணி தான். எனவே, வரும் தேர்தலில் நமது வெற்றி சின்னமான குக்கர் சின்னத்தில் வாக்களித்து தம்பி வேலு.கார்த்திகேயனை மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com