

சென்னை,
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. ஏப்ரல் 23-ந்தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு வருகிற 30-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சுற்றுப்பயண அட்டவணையை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 23.4.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கழகப் பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி 25.3.2026 முதல் 1.4.2026 வரை கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
25.03.2026 - மயிலாப்பூர் (பிற்பகல் 3.30 மணி)
27.03.2026 - ஆலந்தூர் (மாலை 4 மணி), தாம்பரம் (மாலை 6 மணி)
28.03.2026 - ஆர்.கே. நகர் (மாலை 4 மணி), திருவொற்றியூர் (மாலை 6 மணி)
29.03.2026 - நாகர்கோவில் (மாலை 4.30 மணி), ராதாபுரம் (மாலை 5.30 மணி)
30.03.2026 - கடையநல்லூர் (மாலை 4 மணி), கோவில்பட்டி (மாலை 6 மணி)
31.03.2026 - சிவகாசி (மாலை 4 மணி), பரமக்குடி (மாலை 6 மணி)
01.04.2026 - சிவகங்கை (மாலை 4 மணி), புதுக்கோட்டை (மாலை 6 மணி)
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.