தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும்: ஓ.பன்னீர்செல்வம்

தி.மு.க.வில் இணைந்த என்னை அனைவரும் அன்போடு வரவேற்றார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும்: ஓ.பன்னீர்செல்வம்
Published on

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சி யின் உடன்பிறப்புகளை மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களையும் சம நோக்குடன் நடத்தி வருகிறார். தி.மு.க.வில் இணைந்த என்னை அனைவரும் உடன்பிறந்த சகோதரன்போல அன்போடு வரவேற்றார்கள்.

தி.மு.க.வில் உள்ள நான், எனது காரில் தலைவர் மு.க.ஸ்டாலின் படத்தை வைப்பதில் தவறில்லை. வருகிற தேர்தலில் முதல்-அமைச்சர் கொடுக்கிற தொகுதியில் நான் போட்டியிடுவேன். இந்த தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வியை சந்திக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி எத்தனை கூட்டம் நடத்தினாலும் படுதோல்வி அடையும்.

ஏழை, எளிய மக்கள் சமநிலையில் வாழ வேண்டும் என நினைத்தவர் பெரியார். அப்படிப்பட்டவரின் படத்தை கூட்டத்தின் திடலில் இருந்து அகற்றியது கடும் கண்டனத்துக்கு உரியது. நான் எந்த மன போராட்டத்திலும் இல்லை. நான் தி.மு.க.வில் மகிழ்ச்சியோடு இணைந்து உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com