

சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை 10 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து நாளை பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
நாளைய தினம் (20.04.2026) மயிலாப்பூர், ஆவடி, வில்லிவாக்கம், அண்ணா நகர், மதுரவாயல், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், பல்லாவரம், கோவை தெற்கு, தொண்டாமுத்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில், மக்களை நேரில் சந்தித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோர உள்ளேன்.
தமிழகம் முழுவதும் ஆட்சி மாற்றத்திற்காக காத்திருக்கும் மக்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வரலாற்றினை எழுதுவது நிச்சயம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.