5 தொகுதிகளில் நாளை பிரசாரம் மேற்கொள்ளும் அண்ணாமலை

பொதுமக்கள் அனைவரும், பெருந்திரளெனக் கூடி, ஆதரவளிக்க வேண்டுமென அண்ணாமலை தெரிவித்தார்.
5 தொகுதிகளில் நாளை பிரசாரம் மேற்கொள்ளும் அண்ணாமலை
Published on

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய 6 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து நாளை பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, நாளைய தினம் (18.04.2026), தர்மபுரி மற்றும் தளி சட்டமன்றத் தொகுதிகளில், பொதுமக்களை நேரில் சந்தித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி, போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல், சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்திருக்கும், கையாலாகாத திமுக ஆட்சியை அகற்றுவோம்.

பொதுமக்கள் அனைவரும், பெருந்திரளெனக் கூடி, ஆதரவளிக்க வேண்டுமென்று, அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com