நெருங்கும் சட்டசபை தேர்தல்: மக்களை தினமும் சந்திக்க நிர்வாகிகளுக்கு தவெக உத்தரவு

காணொலி வாயிலாக விஜய் தொண்டர்களிடம் பேச வியூகம் அமைக்கப்பட்டு வருகிறது.
நெருங்கும் சட்டசபை தேர்தல்: மக்களை தினமும் சந்திக்க நிர்வாகிகளுக்கு தவெக உத்தரவு
Published on

சென்னை,

சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாகி உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் நிர்வாகிகள் சந்திப்பை நடத்த த.வெ.க. திட்டமிட்டுள்ளது. வருகிற 23-ந்தேதி வேலூரில் நிர்வாகிகள் சந் திப்பு கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்று பேசுகிறார்.

தொடர்ந்து பொள்ளாச்சி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய இடங்களில் நிர்வாகிகள் சந்திப்பு, மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்த திட்டமிட்டு வருகிறது. சட்டசபை தேர்தலுக்கு நாட்கள் குறைவாக இருப்பதால், காணொலி வாயிலாக விஜய் தொண்டர்களிடம் பேசவும் வியூகம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடந்தது. இதில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பங்கேற்று பேசினார். கட்சி நிர்வாக ரீதியாக உள்ள 132 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்..

ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களிடமும் கட்சியின் வளர்ச்சி பணி, கள நிலவரம் குறித்து புஸ்சி ஆனந்த் கேட்டறிந்தார். சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகுங்கள். கட்சி தலைமையில் இருந்து அவ்வப்போது கொடுக்கப்படும் செய்திகளை சமூக வலைத்தளங்கள் மூலம் மக்கள் மத்தியில் உடனடியாக கொண்டு செல்ல வேண்டும்' என்று அவர் அறிவுறுத்தினார்.

'விரைவில் நம்முடைய தேர்தல் அறிக்கை வரும், வேட்பாளர்களும் அறிவிக்கப்பட இருக்கிறார்கள். எனவே நீங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். மக்களை தினமும் சந்திக்க வேண்டும். த.வெ.க. ஆட்சி வந்தால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மக்களிடம் தெருமுனை கூட்டங்கள் நடத்தி பேசுங்கள்' என்று அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com