பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு

மத்திய மந்திரி பியூஸ் கோயல் சென்னை வருகிறார்.
பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு
Published on

புதுடெல்லி,

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நிறைவடைய சில தினங்களே உள்ள நிலையில், பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் நீடிக்கிறது. இதற்கிடையே டெல்லியில் இந்த பட்டியல் ஆழமாக பரிசீலிக்கப்பட்டு இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டதாக தெரிகிறது. அதை எடுத்துக்கொண்டு பியூஷ் கோயல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சென்னை வர இருப்பதாகவும், அந்த பட்டியலை மாநில நிர்வாகிக ளிடம் காண்பித்து வெளியிடுவார் எனவும் கூறப்படுகிறது.

இதிலும் மாநில நிர்வாகிகள் மாற்றத்தை வலியுறுத்தினால், பட்டியல் இரவு அல்லது நாளை வெளியாகும் எனவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com