கட்சிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் பாஜக முத்திரை விவகாரம்: அதிகாரி பணியிடை நீக்கம்

பாஜக முத்திரை விவகாரம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கேள்வி எழுப்பியது.
கட்சிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் பாஜக முத்திரை விவகாரம்: அதிகாரி பணியிடை நீக்கம்
Published on

திருவனந்தபுரம்,

தேர்தலில், குற்ற வழக்கு உள்ளவர்கள் போட்டியிடுவது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தெளிவுபடுத்தி, மாநில தலைமை தேர்தல் ஆணையர் இம்மாத தொடக்கத்தில் கேரளம் மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில், பா.ஜனதா அலுவலக முத்திரை இருந்துள்ளது.

இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கேள்வி எழுப்பியது. தொடர்ந்து அந்த கட்சி கொடுத்த புகாரின் பேரில், பா.ஜனதா முத்திரை நீக்கப்பட்டு தலைமை தேர்தல் அதிகாரி ஒப்புதலுடன் புதிய கடிதம் கடந்த 21-ந் தேதி அரசியல் கட்சிகளுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், தேர்தல் கமி ஷன் அலுவலகத்துக்கு பா.ஜனதா முத்திரை எப்படி வந்தது? என்ற கேள்வி எழுந்தது.

மேலும், தேர்தல் ஆணையத்துக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே ரகசிய தொடர்பு இருப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குற்றம் சாட்டியது. அதே போல் இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜனதாவை எதிர்த்து வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜியும் கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு பதில் அளித்த மாநில தலைமை தேர்தல் ஆணையர் ரத்தன் கேல்கர், இந்த சம்பவத்தில் எழுத்து பிழை நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக, சம்மந்தப்பட்ட பிரிவு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com