விஜயை தனித்துப் போட்டியிட வைத்தது பாஜக - திருமாவளவன்

இரட்டை இலை சின்னம் பாஜகவின் இன்னொரு சின்னமாக மாறிவிட்டது. என்று திருமாவளவன் கூறினார்
விஜயை தனித்துப் போட்டியிட வைத்தது பாஜக - திருமாவளவன்
Published on

செய்யூர் தொகுதியின் விசிக வேட்பாளர் சிந்தனைச் செல்வனை திருமாவளவன் ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய திருமாவளவன் கூறியதாவது: ”விசிக தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் 8 இடங்களில் போட்டியிடுகிறது. அனைத்திலும் நாம் வெல்ல வேண்டும். அதில், செய்யூர் முதலாவதாக இருக்க வேண்டும். அதனால், நாம் வாக்குகள் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அதிமுக தற்போது இல்லை. இரட்டை இலை சின்னம் பாஜகவின் இன்னொரு சின்னமாக மாறிவிட்டது.

தப்பித்தவறி கே. பழனிசாமி முதல்வரானால், 2 மாதம் கூட பாஜக பொறுத்துக்கொள்ளாது. எடப்பாடியைத் தூக்கி எறிந்து விட்டு அண்ணாமலையைக் கூட முதல்வராக்குவார்கள். அதேபோல, விஜயை கூட்டணி இல்லாமல் தனியாக நிறுத்தி இருப்பதே பாஜக தான். அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என பாஜக அழுத்தம் கொடுத்தது என்பதெல்லாம் பொய்” இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com