பா.ஜனதா மாநில கட்சிகளை விழுங்கி வருகிறது: ரோகித் சவுத்ரி பேட்டி

தமிழகத்தில் பா.ஜனதாவால் காலூன்ற முடியாது என்று காங். ராணுவ படைப்பிரிவு தலைவர் ரோகித் சவுத்ரி கூறினார்.
பா.ஜனதா மாநில கட்சிகளை விழுங்கி வருகிறது: ரோகித் சவுத்ரி பேட்டி
Published on

நெல்லை,

நெல்லையில் அகில இந்திய காங்கிரஸ் ராணுவ படைப்பிரிவு தலைவர் ரோகித் சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட் டியுள்ளது. பா.ஜனதா-அ.தி.மு.க கூட்டணி பல்வேறு பொய் பிரசாரங்களை செய்து வருகிறது. பா.ஜனதா மாநில கட்சிகளை விழுங்கி வருகிறது. மராட்டியத்தில் சிவசேனையை பிரித்தாளும்  சூழ்ச்சியால் வீழ்த்தியது.

இப்போது நிதிஷ்குமாரை முதல்-மந் திரி பதவியில் இருந்து நீக்கி விட்டனர். அதேபோல தமிழகத்தி லும் அ.தி.மு.க.வை வைத்து பா.ஜனதா காலூன்ற பார்க்கிறது. ஆனால், அது இந்தத் தேர்தலில் நிறைவேறாது. தமிழகத்தில் பா.ஜனதாவால் காலூன்ற முடியாது. மக்கள் விழிப்புடன் உள்ளனர்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஏற்கெனவே கொண்டு வரப்பட்ட நிலையில், இப்போது மக்களவை தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவை நிறைவேற்ற மீண்டும் மகளிர் இடஒதுக் கீட்டு திருத்த மசோதாவையும் கொண்டு வந்துள்ளனர். இதன்மூ லம் மக்களை பா.ஜனதா ஏமாற்றப் பார்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com