ஆண்டிப்பட்டி தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாக அண்ணன் - தம்பி இடையே போட்டி

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 8,538 வாக்குகள் வித்தியாசத்தில் மகாராஜன் வெற்றி பெற்றார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாக அண்ணன் - தம்பி இடையே போட்டி
Published on

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளராக லோகிராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது அண்ணனும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான மகாராஜன் தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். ஒரே தொகுதியில் 3-வது முறையாக 2 பேரும் நேருக்கு நேர் மோதுகின்றனர் என்பது குறிப்பி டத்தக்கது.

கடந்த 2019-ம் ஆண்டு இடைத்தேர்தலில் முதன் முறையாக 2 பேரும் நேருக்கு நேர் மல்லுக்கட்டினர். இதில் தி.மு.க. சார்பில் போட்டி யிட்ட மகாராஜன் 12,323 வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றி பெற்றார். தொடர்ந்து 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் 2 பேரும் நேருக்கு நேர் போட்டியிட்டதில் 8,538 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் மகாராஜன் வெற்றி பெற்றார்.

இந்த 2 தேர்தல்களிலும் அ.ம.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார் பெற்ற வாக்குகள், தேர்தல் முடிவில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தம்பியை எதிர்த்து ஹாட்ரிக் வெற்றியை நோக்கி மகாராஜன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

மறுபுறம், கடந்த தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட லோகிராஜன், இந்த முறை வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறார். தொடர்ந்து 3-வது முறையாக அண்ணன்-தம்பி நேருக்கு நேர் மோதும் இந்த தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப டுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com