

சென்னை,
சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 4-வது முறை வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கிறார். எனவே அவர், கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற் கான வேட்புமனுவை இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்ய உள்ளார்.
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் செம்பியம் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் 12 மணியளவில் வருகிறார். அங்கு கொளத்தூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியான எஸ்.சாந்தியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.