முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் கே.சி.வேணுகோபால் சந்திப்பு

காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது தொடர்பாக இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன்  கே.சி.வேணுகோபால் சந்திப்பு
Published on

சென்னை,

தமிழக முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் சந்தித்துள்ளார். ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் அமைந்துள்ள முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், செல்வப் பெருந்தகை உள்ளிட்டோரும் சந்திப்பின் போது உடன் இருந்தனர்.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடங்கியுள்ள சூழலில் இன்று நடைபெற்ற இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற காங்கிரஸ் நிர்வாகிகளின் பேச்சால் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், மு.க. ஸ்டாலின் -கே.சி. வேணுகோபால் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது தொடர்பாக இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்குக்கு வாய்ப்பு இல்லை என்று திமுக ஏற்கனவே திட்டவட்டமாக கூறிவிட்டதாக சொல்லப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 27 + 1 (ராஜ்யசபா) வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இன்று நடைபெற்ற இந்த சந்திப்பில் இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com