திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த பழ. நெடுமாறனுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

தமிழ்நாட்டைச் சூழும் பேராபத்தை முறியடித்து வாகை சூடுவோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த பழ. நெடுமாறனுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி
Published on

சென்னை,

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "தமிழ் மொழி, தமிழர் தமிழக நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் பாஜக பல கட்சிகளை கூட்டணி சேர்த்துக்கொண்டு களமிறங்கி உள்ளது; இந்த பேரபாயத்தை முறியடிக்க திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

இந்த நிலையில், திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த பழ. நெடுமாறனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மண், மொழி, மானம் காத்திட, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள அய்யா பழ. நெடுமாறன் அவர்களுக்கு நன்றி. தமிழுணர்வை நெஞ்சில் ஏந்திக் களமாடுவோம்; தமிழ்நாட்டைச் சூழும் பேராபத்தை முறியடித்து வாகை சூடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com