தொகுதி பங்கீட்டில் இழுபறி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு

திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு இன்று மாலைக்குள் தெரிந்துவிடும் என டிவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
தொகுதி பங்கீட்டில் இழுபறி:  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்தநிலையில் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து இழுப்பறி நீடித்து வரும் நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி வருகிறார். சுமார் 1 ஒன்றரை மணி நேரமாக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகையுடன் இணைந்து காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே ஆகியோருடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனையில் காங்கிரஸ் 36 தொகுதிகள் கேட்பதாகவும் 36 தொகுதிகள் குறைந்தால் மாநிலங்களவை எண்ணிக்கை 2 ஆக கூடும் என காங்கிரஸ் மேலிடம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக தரப்பில் 26 தொகுதிகள் தர இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து திமுக - காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வருகிறது.

இதனிடையே, தொகுதி பங்கீடு பிரச்சினையை திமுக தலைவர் சுமூகமாக தீர்ப்பார். காங்கிரஸ் கேட்பது ஒன்று, திமுக சொல்வது ஒன்று. இன்று மாலைக்குள் நல்ல செய்தி வரும். காங்கிரஸ் நிலைபாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என திமுகவின் செய்தி தொடர்பாளர் டி.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com