தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் 3 நாட்களில் முடிவு - டாக்டர் ராமதாஸ் பேட்டி

கூட்டணி தொடர்பாக டாக்டர் ராமதாஸ் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் 3 நாட்களில் முடிவு - டாக்டர் ராமதாஸ் பேட்டி
Published on

சென்னை,

பாமகவில் நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டு கோர்ட்டு வரை சென்றுள்ளனர். டாக்டர் அன்புமணி ராமதாஸ் தரப்பிலான பா.ம.க., அ.தி.மு.க.-பா.ஜனதா அமைத்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. தேர்தலில் கூட்டணி தொடர்பாக டாக்டர் ராமதாஸ் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

அதிமுக- பாஜக கூட்டணியில் அவரது மகன் அன்புமணி இணைந்துள்ளதால், திமுக அல்லது தவெகவுடன் ராமதாஸ் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இருக்கும் என்று ராமதாஸ் கூறியிருந்தார்.

இந்த நிலையில், பாமக நிர்வாகிகளுடன் டாக்டர் ராமதாஸ் இன்று ஆலோசனை நடத்தினார். தைலாபுரத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறுகையில், “தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை; 3 நாட்களில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்” என கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com