மநீம போட்டியிடும் சின்னம் குறித்து விரைவில் முடிவு: பொதுச்செயலாளர் அருணாச்சலம் பேட்டி

திமுக கூட்டணியில் 2 கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
மநீம போட்டியிடும் சின்னம் குறித்து விரைவில் முடிவு: பொதுச்செயலாளர் அருணாச்சலம் பேட்டி
Published on

சென்னை,

தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளது. டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்து, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. காங்கிரஸ் உட்பட 9 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 2 கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

மேலும் இந்திய கம்யூனிஸ்டு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, சமத்துவ மக்கள் கழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது. காங்கிரஸ் கட்சி கூடுதல் இடங்களை கேட்டு விடாபிடியாக இருப்பதால் அந்த கட்சியுடன் மட்டும் இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக மக்கள் நீதி மய்யத்துடன் தி.மு.க. இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம் கூறியதாவது:-

திமுகவுடன் தொகுதி பங்கீடு முதற்கட்ட பேச்சுவார்த்தைய நடத்தினோம். மக்கள் நீதி மய்யம் சார்பில் தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளது; அதனை முதல்-அமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்வதாக திமுக பேச்சுவார்த்தை குழுவினர் தெரிவித்தனர். சட்டபை தேர்தலில் மநீம போட்டியிடும் சின்னம் குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். அடுத்தடுத்த பேச்சுவார்த்தையில் எத்தனை தொகுதிகள் என்பது தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com