வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல் மந்திரி இன்று பிரசாரம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.
வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல் மந்திரி இன்று பிரசாரம்
Published on

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளரான வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இன்று மாலை 4.30 அளவில் பிரசாரத்தைத் தொடங்கும் ரேகா குப்தா, அவிலா ஸ்கூல் அருகில் வெங்கிடாபுரம், சின்னம்மாள் நகர், கண்ணப்பா நகர் 5வது வீதி, கே கே புதூர், எஸ்பிஐ ரோடு, நாராயணசாமி வீதி ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.

திமுகவுக்கு ஆதரவாக டெல்லியின் முன்னாள் முதல்மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் வருகிற 20, 21 ஆகிய தேதிகளில் சென்னை வரவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com