

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் விஜய்யின் தவெக 108 இடங்களை கைப்பற்றி புதிதாக ஆட்சி அமைக்க உள்ளது. ஆளும் கட்சியான திமுக, பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. திமுக கூட்டணி கட்சி 73 தொகுதிகளையே கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி 53 இடங்களை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் உட்பட16 அமைச்சர்கள் இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.
தேர்தலில் தோல்வியடைந்த அமைச்சர்கள் விவரம் பின்வருமாறு:
* மு.க.ஸ்டாலின் - கொளத்துார்
* துரைமுருகன் - காட்பாடி
* தியாகராஜன் - மதுரை மத்தி
* கீதா ஜீவன் - துாத்துக்குடி
* மூர்த்தி - மதுரை கிழக்கு
* ஆர்.காந்தி - ராணிப்பேட்டை
* மா. சுப்ரமணியன் - சைதாபேட்டை
* ராஜேந்திரன் - சேலம் வடக்கு
* நாசர் - ஆவடி
* அன்பில்மகேஷ் - திருவெறும்பூர்
* மதிவேந்தன் - ராசிபுரம்
* டி.ஆர்.பி.ராஜா - மன்னார்குடி
* முத்துசாமி - ஈரோடு மேற்கு