

சென்னை,
சென்னை கொளத்தூரில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் வடிவேலு கலந்து கொண்டார்.
இதில் பேசிய வடிவேலு, “முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொகுதியில் நான் பேச வந்திருப்பது ரொம்ப பெருமையாக உள்ளது. அவருக்கு 73 வயது ஆகிறது என சொன்னாலும், அவரின் செயல்பாடு 37 வயதானவர் போல தான் தெரிகிறது. அவரைப் போல ஒரு தலைவர், முதல்-அமைச்சர் தமிழ்நாட்டுக்கு கிடைப்பது ரொம்ப கஷ்டம். மு.க. ஸ்டாலின் ஒரு சம்பவத்தை திடீரென்று செய்துவிட்டார்.
ரூ.5 ஆயிரம் ரூபாயை அனைவரின் அக்கவுண்டிலும் தமிழ்நாடு அரசு வரவு வைத்தது. அதிகாலையில் இந்த தொகை வந்த நிலையில், திமுகவை அழிக்க வேண்டும் என சொன்னவர்கள் கூட அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள். இதைவிட நிறைய விஷயங்களை ஸ்டாலின் செய்யப் போகிறார். அவர் சாதாரண ஆள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பேச வேண்டிய வசனங்கள் எல்லாம் மேடையில் மட்டும்தான் பேச முடியும். ஆனால் செயல்பாடுகள் இருக்கும் ஒரே கட்சி திமுக தான். திமுக மட்டும் ஆட்சியில் இல்லாத மாதிரி யோசித்து பாருங்கள். தமிழ்நாடே அழிந்துவிடும். இந்தக் கட்சியை விட்டால் வேறு கட்சியே இல்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களுக்கு மேலாக நாம் ஜெயிப்போம்” இவ்வாறு அவர் பேசினார்.