திமுக கூட்டணியில் ஒரே நாளில் 4 கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு கையெழுத்து

தி.மு.க. கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் ஒரே நாளில் 4 கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு கையெழுத்து
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன

தேர்தலுக்கான திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கருணாஸ் தெரிவித்துள்ளார். எனினும், எந்தத் தொகுதியில் போட்டி என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பார் என்று அவர் மேலும் தெரிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் கருணாஸ் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுகிறார்.

இதேபோல் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இந்த கட்சியும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சிகள் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதேபோல, தமிழர் தேசம் கட்சி மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கும் தலை ஒரு இடங்கள் ஒதுக்கி, ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம், திமுக கூட்டணியில் இன்று ஒரே நாளில் 4 கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு கையெழுத்தாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com