தி.மு.க. கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் : தனியார் கருத்துக்கணிப்பில் தகவல்

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி சுமார் 35 சதவீத வாக்குகளைப் பெற்று 70 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது.
தி.மு.க. கூட்டணி  மீண்டும் ஆட்சி அமைக்கும் : தனியார் கருத்துக்கணிப்பில் தகவல்
Published on

சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் (ஐ.பி.டி.எஸ்.) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக மாநிலம் தழுவிய அளவில் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தினோம். எங்களின் 4-வது கட்ட ஆய்வில் 35 ஆயிரத்து 126 பேரிடம் நேரில் சென்று தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக மாநிலம் தழுவிய அளவில் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தினோம்.

எங்களின் 4-வது கட்ட ஆய்வில் 35 ஆயிரத்து 126 பேரிடம் நேரில் சென்று தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அதன்படி, தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் எனத் தெரிகிறது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் சுமார் 138 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும். அவர்களின் வாக்கு வங்கி 39.80 சதவீதமாக இருக்கும்.

அதேபோல், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி சுமார் 35 சதவீத வாக்குகளைப் பெற்று 70 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அக்கட்சி சுமார் 33 சதவீத வாக்குகளைப் பெற்று 3-வது இடத்தைப் பிடிக்கும். ஆனால் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியவில்லை. சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு 8.42 சதவீத ஆதரவு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com