சட்டசபை தேர்தல்: திமுகவில் விருப்பமனு வழங்கும் பணிகள் தொடக்கம்

விருப்ப மனுக்களை பொறுத்தவரையில் 234 தொகுதிகளுக்கும் பெறப்படுகிறது.
சட்டசபை தேர்தல்: திமுகவில் விருப்பமனு வழங்கும் பணிகள் தொடக்கம்
Published on

சென்னை,

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற ஏப் ரல் மாதம் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின் றன. நேரடியாகவும், மறைமுகமாகவும் கூட்டணியை இறுதி செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையாத சூழலிலும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவ தற்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு நேர்காணலும் நிறைவடைந்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. அதேபோன்று நடிகர் விஜய்யின் த.வெ.க.வில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

வேட்பாளர்கள் தேர்வில் மற்ற கட்சிகள் தீவிரம் காட்டி வரும் வேளையில் ஆளுங்கட்சியான தி.மு.க. சார்பில் விருப்ப மனுக்கள் எப்போது பெறப் படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்திலும், தி.மு.க. நிர்வாகிகள் மத்தியிலும் இருந்து வந்த நிலையில் தி.மு.க.வில் வேட்பாளராக போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் வினியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியுள்ளது.

இன்று முதல் மார்ச் 2-ந்தேதி வரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பித்திட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவ கட்டணமாக ரூ.1,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொது தொகுதிக்கு ரூ.25 ஆயிரமும், மகளிர் மற்றும் தனி தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

234 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு 64 தொகுதிகளை பகிர்ந்து அளிக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள 170 தொகுதிகளில் தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. தற்போது விருப்ப மனுக்களை பொறுத்தவரையில் 234 தொகுதிகளுக்கும் பெறப்படுகிறது.

வேட்பாளர்கள் விருப்ப மனு வினியோகம் தொடங்கியுள்ளதால் தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அண்ணா அறிவாலயம் தி.மு.க.வினர் கூட்டத்தால் களைகட்டி உள்ளது. வழக்கமாக தேர்தல் வந்துவிட்டால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் போட்டி போட்டு விருப்ப மனுவை அளிப்பார்கள்.

அதன்படி அவர்கள் 2 பேரின் பெயர்களில் அதிகமான மனுக்கள் அளிக் கப்படும் என்று தெரிகிறது. வேட்பாளர்கள் விருப்ப மனுக்கள் பெறும் பணி முடிவடைந்த பின்னர், தொகுதி வாரியாக வேட்பாளர்கள் நேர்காணலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்த உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com