திமுக-விசிக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை... இரட்டை இலக்க தொகுதிகள் கிடைக்குமா?

தொகுதி பங்கீடு குறித்து திமுக–விசிக இடையே இன்று முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
திமுக-விசிக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை... இரட்டை இலக்க தொகுதிகள் கிடைக்குமா?
Published on

சென்னை,

தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்து, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் காங்கிரஸ் உட்பட 9 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 2 கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐயூஎம்எல்), மனிதநேய மக்கள் கட்சி (மமக) ஆகிய கட்சிகளுடன் திமுக குழுவினர் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இந்த தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. முஸ்லீம் லீக் ‘ஏணி’ சின்னத்திலும், மமக ‘உதயசூரியன்’ சின்னத்திலும் போட்டியிட உள்ளது.

இந்த நிலையில், தொகுதி பங்கீடு குறித்து திமுக–விசிக இடையே இன்று முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 4 இடங்களில் அந்த கட்சி வெற்றி பெற்றது. இந்த முறை விசிக இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. இதற்கு திமுக செவிசாய்க்குமா என்பது தெரியவில்லை.இந்த வாரத்திற்குள் அனைத்து கட்சிகளுக்கும் எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து ஒதுக்கீடு செய்ய திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com