விஜய்யும்-ராகுல்காந்தியும் ஒரே மேடையில் நின்றால் திமுகவுக்கு மாரடைப்பு ஏற்படும்: நாஞ்சில் சம்பத்

தனியாக நின்று வெல்ல முடியும் என்கின்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.
விஜய்யும்-ராகுல்காந்தியும் ஒரே மேடையில் நின்றால் திமுகவுக்கு மாரடைப்பு ஏற்படும்: நாஞ்சில் சம்பத்
Published on

தென்காசி,

தென்காசியில் தமிழக வெற்றிக் கழக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம் பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சட்டப்பேரவை முடியும் நாளன்று சம்பிரதாயத்திற்காக ஓ.பன்னீர்செல்வம் சந்தித்திருக்கிறார். 3 முறை முதல்-அமைச்சராக இருந்த அவர் தனது முடிவு குறித்து இன்னும் சிந்தித்துக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

வருகின்ற 24-ந்தேதி ஜெயலலிதா பிறந்தநாள் அன்று சசிகலா பசும்பொனில் புதிய கட்சி தொடங்குகிறார். அதில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளதாக நம்புகிறேன். அந்த புதிய கட்சி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது.

த.வெ.க. கூட்டணிக்காக எந்த கட்சிகளையும் விலைக்கு வாங்க தயார் இல்லை. தனியாக நின்று வெல்ல முடியும் என்கின்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. த.வெ.க.வுடன் கூட்டணி சேர வேண்டும் என்கின்ற தாகமும், தவிப்பும் சில கட்சிகளுக்கு உள்ளது. அவர்கள் எங்களுடன் விரைவில் கூட்டணி வைப்பார்கள்.

தமிழக வெற்றிக் கழகமும், காங்கிரசும் கூட் டணி அமைத்தால் 234 தொகுதியிலும் வெற்றி பெறும். ராகுல் காந்தியும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யும் ஒரே மேடையில் நின்றால் திமுகவினருக்கு மாரடைப்பு ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com