

விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
புதுவையில் தி.மு.க - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இழுபறி நீடித்தபோது வி.சி.க தனித்துப் போட்டி என அறிவித்தோம். வேட்புமனு பரிசீலனைக்கு பிறகே கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டது. வி.சி.க போட்டியிடுவதாக வேட்புமனு தாக்கல் செய்த 4 தொகுதிகளில் உழவர்கரையை கூட்டணி சார்பில் எங்களுக்கு ஒதுக்கி அறிவித்தனர்.
டெல்லியில் இருந்து காங். தலைமை எங்களை தொடர்புகொண்டு உழவர்கரையில் மட்டும் போட்டியிடுமாறு அறிவுறுத்தினர். ஊசுடு, நெட்டப்பாக்கம், ஏனாம் தொகுதிகளில் வி.சி.க வேட்பாளர்கள் பெயர் இருந்தாலும் கூட்டணி கட்சியினருக்கு தான் வாக்கு சேகரிப்பார்கள்.
உழவர்கரையில் மட்டும் தான் வி.சி.க வேட்பாளருக்காக வாக்குகளை கோருவோம் எஞ்சிய தொகுதிகளில் போட்டியிடும் வி.சி.க வேட்பாளர்களுக்கு வாக்களிக்காமல் கூட்டணி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.