

தஞ்சாவூர்,
தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-
2021-ல் நாங்கள் பிரிந்து கிடந்தோம். நீங்கள் எளிதாக ஆட்சிக்கு வந்தீர்கள். இப்போது ஜெயலலிதா பிள்ளைகள் அனைவரும் ஓரணியில் திரண்டிருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும் என்பதற்காக அ.ம.மு.க. இன்றைக்கு அ.தி.மு.க.வுடன் கை கோர்த்திருக்கிறோம்.
சிலரைப்போல் சீட்டுக்காகவும், நோட்டுக்காகவும் நாங்கள் செல்லவில்லை. சிலரைப்போல் அம்மாவால் பதவி பெற்று, ஆட்சி அதிகாரத்தில் இடம் பெற்று, அமைச்சர் பதவி, முதல்-அமைச்சர் பதவி என பல பதவிகளை பெற்றுவிட்டு இன்றைக்கு அ.தி.மு.க. ஒரு சரியான கட்சியாக இல்லை என்றெல்லாம் பொய்ப்பிரசாரம் செய்து என்னை சேர்த்துக்கொள்ளுங்கள், நான் தொண்டனாக கூட இருக்கின்றேன் என்று நரிவேஷம் போட்டு நடித்து தீய சக்தி தி.மு.க.வில் போய் சேர்ந்திருக்கிறார்கள் என்றார்.