எடப்பாடி பழனிசாமியின் சென்னை மாவட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயண அட்டவணை வெளியீடு

எடப்பாடி பழனிசாமி வருகிற 8, 9 ஆகிய தேதிகளில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் வருகிற 8, 9 ஆகிய தேதிகளில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். அதன் சுற்றுப்பயண அட்டவணை வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 23-ந்தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கழகத்தின் சார்பிலும், கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த 8.4.2026 & 9.4.2026 ஆகிய தேதிகளில், சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில், கீழ்க்கண்டவாறு தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

8-ந்தேதி (புதன்கிழமை)

வேளச்சேரி - காந்தி ரோடு ஜங்ஷன் (காலை 9 மணி)

சைதாப்பேட்டை - 5 லைட், ஆலந்தூர் ரோடு (காலை 10 மணி)

விருகம்பாக்கம் - அருணாச்சலம் ரோடு (காலை 11 மணி)

தியாகராயநகர் - சிஐடி நகர் (மாலை 4 மணி)

அண்ணாநகர் - டிபி சத்திரம் (மாலை 5 மணி)

வில்லிவாக்கம் - எம்டிஎச் ரோடு (மாலை 6 மணி)

கொளத்தூர் - அருள்மிகு லக்‌ஷ்மியம்மாள் கோயில் அருகில் (இரவு 7 மணி)

பெரம்பூர் - அசோக் பில்லர் (இரவு 8 மணி)

9-ந்தேதி (வியாழக்கிழமை)

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - இருசப்ப தெரு (டாக்டர் நடேசன் சாலை) (காலை 9 மணி)

ஆயிரம் விளக்கு - கருமாரியம்மன் கோயில் (புஷ்பா நகர்) (காலை 10 மணி)

ராயபுரம் - பெரியபாளையத்தம்மன் நகர் அருகில் (திருவொற்றியூர் நெடுஞ்சாலை) (மாலை 4 மணி)

துறைமுகம் - அரசு அச்சகம் அருகில் (தங்கசாலை) (மாலை 5 மணி)

திரு.வி.க. நகர் & எழும்பூர் - அம்பிகா ஓட்டல் அருகில் (புளியந்தோப்பு நெடுஞ்சாலை) (மாலை 6 மணி)

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com