சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடர்புகொள்ள ... உதவி எண் அறிவிப்பு...!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
சிங்கப்பெண் படை தொடக்கவிழா
Published on

சென்னை,

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை விரைவாக தொடர்புகொள்ள 1091 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பெண் அதிரடிப்படை

முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றவுடன் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, கடந்த 9ம் தேதி முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த அதிரடிப்படையின் முதல் பெண் ஐஜி-யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த படை முதல்-அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது.

1091

இந்நிலையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடர்புகொள்ள உதவி எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் செயல் திறனை மேம்படுத்த, விரைந்து நடவடிக்கை எடுக்க உதவி எண் அறிக்கப்பட்டுள்ளது. 1091 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு பெண்கள், குழந்தைகள் சிங்கப்பெண் அதிரடி படையின் உதவியை எளிதாக நாடலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com