கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன்

தமிழகத்தை தவெகதான் ஆளப்போகிறது என்று செங்கோட்டையன் கூறினார்.
கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன்
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் த.வெ.க. மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் த.வெ.க.வின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. விஜய்யின் இலக்கு தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதுதான். புதிய கட்சியான த.வெ.க.வை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விஜய் யாரை பார்த்து விரல் நீட்டுகிறாரோ அவர்தான் எம்.எல்.ஏ. ஆவார். அ.தி.மு.க.வில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவன் நான். அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்று தான் நான் கூறினேன். ஆனால் என்னை ஒரு மணித்துளியில் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினர். அ.தி.மு.க.வில் பலரை இணைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி தற்போது தோப்புக்கரணம் போட்டுக்கொண்டிருக்கிறார்.

கோபி தொகுதியில் நான் போட்டியிடுவதற்காக நாளை (வெள்ளிக்கிழமை) சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருப்பமனு அளிக்க உள்ளேன். தமிழகத்தை த,வெ.க.தான் ஆளப்போகிறது. நான் காமெடியாக கூறவில்லை சீரியசாக சொல்கிறேன். மத்திய பட்ஜெட் குறித்து நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இதுபற்றி பேசுவோம். த.வெ.க. தனித்துப்போட்டியிடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மவுனம் வெற்றிக்கு அறிகுறி. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com