

நெல்லை,
நெல்லையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.ஸ்டாலின் பேசியதாவது: , 'ஸ்டாலின் சொன்னதை மட்டு மல்ல, சொல்லாததையும் செய்வார். ஆனால், எடப்பாடி பழனி சாமி சொன்னதையும் செய்யமாட்டார், சொந்தமாகவும் செய்ய மாட்டார் என்று 'கமெண்ட்' அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு, 11-வது தோல்வி ஸ்டிக்கரை ஒட்ட மக் களும் தயாராகிவிட்டார்கள்.
ஏனென்றால், களத்தில் இருப்பது யார்? சூப்பர்ஸ்டார். சூப்பர்ஸ்டாரு யார் என்று கேட்டால் தி.மு.க. தேர்தல் அறிக்கை என்று சின்ன குழந்தையும் சொல்லும் என்று ஒரு பாட்டே இருக்கிறது (இவ்வாறு கூறிய போது அதை பாடலாக மு.க.ஸ்டாலின் பாடி அசத்தினார்). பிரசாரத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ரஜினி பட பாடலை பாடியதும் கூட்டத்தில் இருந்ந தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.