சட்டசபை தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை?

சிங்காநல்லூர் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட உள்ளதாக கூறப்பட்டது.
சட்டசபை தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை?
Published on

சென்னை,

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும், சீமானின் நாம் தமிழர் கட்சி, புதுவரவான தவெகவும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

திமுகவும், அதிமுகவும் தொகுதிப் பங்கீட்டை கிட்டத்தட்ட நிறைவு செய்திருக்கும் நிலையில், இன்று காலை முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சித் தலைமை இன்று வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி, முன்னாள் தலைவர் அண்ணாமலை சிங்காநல்லூர், வானதி சீனிவாசன் கோவை வடக்கு உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழிசை சவுந்தரராஜன், விஜயதாரணி உள்ளிட்டோரும் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், 2026 சட்டசபை தேர்தலில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை போட்டியப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என பாஜக தலைமைக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளதாக கூறப்பட்டுகிறது. பாஜகவில் தொண்டனாகவே கடமையை உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் அண்ணாமலைக்கு அதிக பிரசார பயணங்கள் உள்ளதாக பாஜக மூத்த நிர்வாகி கூறியுள்ளார். 2021 சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சியிலும் 2024 மக்களவை தேர்தலில் கோவையிலும் அண்ணாமலை போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com