

கோவை,
திருப்பூர் மாவட்டம் அவினாசி தொகுதி வேட்பாளராக போட்டியிடும் மந்திய மந்திரி எல்.முருகன் கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க. தோல்வி பயத்தில் தினமும் அரசியல் நாடகங்களில் ஈடுபட்டு வருகிறது. மாநிலத்தில் உயர்த்தப்பட்ட மின்சார கட்டணம், சொத்து வரி காரணமாக மக்கள் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள். இதை எதிர்கொள்ள மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கடந்த தேர்தலை விட இந்த முறை அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம். முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நட்சத்திர பேச்சாளராக இருப்பது மகிழ்ச்சி. பா.ஜனதாவில் எந்த உட்கட்சி பிரச்சினையும் இல்லை. பா.ஜனதாவில் அக்கா-தம்பி, அண்ணன்-தம்பி என்ற குடும்ப அரசியல் இல்லை.
கருணாநிதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. ஆட்சியை மாற்ற வேண்டும். டபுள் என்ஜின் அரசு' தமிழ்நாட்டில் உருவாக வேண்டும்.
மக்களின் வளர்ச்சிக்காக மாற்றம் அவசியம். புதியவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது அல்லது மீண்டும் வாய்ப்பு வழங்குவது குறித்து இறுதி முடிவு கட்சியே எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.