

சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நாளை 5 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர், கமல் ஹாசன் 20-04-2026, திங்கள் அன்று கீழ்க்காணும் இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.
மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பிரசாரம் சிறப்புற நடைபெற உரிய ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி! நாளை நமதே
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.