விசிக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல்: திமுகவிடம் வழங்கியது

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய கட்சியாக விசிக இடம்பெற்றுள்ளது.
விசிக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல்: திமுகவிடம் வழங்கியது
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. ஏப்ரல் 23-ந் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு வருகிற 30-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.தேர்தல் நெருங்குவதால் ஆளும் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டை ஏறக்குறைய முடித்துவிட்டது. ஒரு சில கட்சிகளுடன்தான் பாக்கியுள்ளது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகளை திமுக தலைமை ஒதுக்கி உள்ளது. அதன்படி திமுக-விசிக இடையேயான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. விசிகவுக்கு 8 தொகுதிகளில் 6 தனி தொகுதிகளும் 2 பொது தொகுதிகளும் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்மூலம் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை பெற்றதில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய கட்சியாக விசிக இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை விசிக திமுகவிடம் வழங்கியுள்ளது.

அதன்விவரம் பின்வருமாறு:-

* திருப்போரூர்

* செய்யூர்

* நாகை

* புவனகிரி

* அரூர்

* காட்டுமன்னார் கோயில்

* கள்ளக்குறிச்சி

* குன்னம்

* மயிலம்

* பெரியகுளம்

* சிவகங்கை(வானூர் அல்லது திண்டிவணம் )

* கே.வி.குப்பம்

* ஸ்ரீபெரும்புதூர்

* சென்னை மாவட்டம் (ஒரு தொகுதி )

10 தனித் தொகுதிகள், 5 பொதுத் தொகுதிகள் என மொத்தம் 15 தொகுதிகள் ஆகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com