‘டெல்லி மட்டுமல்ல, அமெரிக்காவே மிரட்டினாலும் மு.க.ஸ்டாலின் பணியமாட்டார்’ - ஓ.பன்னீர்செல்வம்

மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருக்கும் வரை தமிழ்நாடு யாருக்கும் தலைகுணியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
‘டெல்லி மட்டுமல்ல, அமெரிக்காவே மிரட்டினாலும் மு.க.ஸ்டாலின் பணியமாட்டார்’ - ஓ.பன்னீர்செல்வம்
Published on

சிவகங்கை,

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்தார். தொடர்ந்து, 20206 சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், சிவகங்கையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் ‘எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றாலே மு.க.ஸ்டாலின் பயந்துவிடுகிறார்’ என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது;-

“தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி மட்டுமல்ல, அமெரிக்காவே மிரட்டினாலும் பணியமாட்டார். தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதை மக்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை தமிழ்நாடு யாருக்கும் தலைகுணியாது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com