விஜய் ஆட்சியில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: செங்கோட்டையன்

சட்டமன்ற தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம் என்று செங்கோட்டையன் கூறினார்.
விஜய் ஆட்சியில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: செங்கோட்டையன்
Published on

கோவை,

தமிழக வெற்றிக் கழக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் நல்லாட்சி, தூய்மையான ஆட்சியை தமிழக வெற்றிக் கழகத்தால் மட்டுமே தர முடியும். பெண்களுக்கு முழு பாதுகாப்பு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிற அரசாக இருக்கும். புதிய ஆட்சி வேண்டும் என்பது மக்களின் கனவாக இருக்கிறது.

வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜய் ஆட்சியில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. மக்கள் சக்தி அவருக்கு பின்னால் இருக்கிறது. தற்போது த.வெ.க. சார்பில் கோபியில் போட்டியிடுகிறேன். கடந்த 40 ஆண்டுகள் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் எனது பணிகள் இருந்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் மக்கள் சக்தியை, தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம்.

சாதாரண உறுப்பினராக கூட இருக்கக்கூடாது என அ.தி.மு.க.வில் இருந்து என்னை தூக்கி எறிந்தனர். இதனால் த.வெ.க.வில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். மக்கள் தீர்ப்பால் எஸ்.பி.வேலுமணியின் கருத்து கள் அனைத்தும் தூள் தூளாக்கப்படும். ஜெயலலிதா உள்பட எல்லா தலைவர்களும் 2 தொகுதிகளில் போட்டியிட்டு உள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com