திமுக சார்பில் போடி தொகுதியில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் விருப்பமனு

திமுகவில் விருப்ப மனு வழங்குவதற்கு இன்று கடைசி நாள்.
திமுக சார்பில் போடி தொகுதியில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் விருப்பமனு
Published on

சென்னை,

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 20-ந்தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. தற்போதைய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்து வருகிறார்கள்.

அதேபோன்று தி.மு.க. நிர்வாகிகள் பலரும் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வழங்கி வருகிறார்கள். தி.மு.க.வில் விருப்ப மனு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. எனவே அண்ணா அறிவாலயத்தில் இன்று வழக்கத்தை விட கூட்டம் அலைமோதுகிறது.

இந்த நிலையில், கம்பம், போடி, ஆண்டிப்பட்டி ஆகிய 3 தொகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் போட்டியிட வேண்டும் என முன்னாள் எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் விருப்ப மனு அளித்துள்ளார். மேலும் ஓ.பன்னீர்செல்வத்துக்காக போடி தொகுதியிலும், தனக்காக ஆண்டிப்பட்டி மற்றும் போடி தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு கேட்டு ரவீந்திரநாத் விருப்ப மனு வழங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com