

சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக துண்டை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது குறித்து காங். தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதவாது:-
காலாவதியான அதிமுகவில் இருந்து எந்த பலனும் இல்லை என்பதால் நல்ல முடிவு எடுத்துள்ளார். ஓபிஎஸ் வருகையில் திமுக கூட்டணி மேலும் வலுவடைந்துள்ளது. பாஜகவின் கிளைக் கழகமாகவே தற்போது அதிமுக உள்ளது; தமிழ்நாட்டின் நலனையும், தன்னுடன் இருப்பவர்களின் நலன் கருதியும் முடிவு எடுத்துள்ளார் என கூறினார்.