

கோவையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது தவெக தலைவர் விஜய்யை கடுமயாக விமர்சித்தார். சீமான் கூறியதாவது:
5 ஆண்டுகள் ஆட்சி செய்த தி.மு.க. ஆட்சி முடியும் நேரத்தில் உங்கள் கனவை சொல்லுங்கள் என்று கேட்கிறது. அப்படி என்றால் 5 ஆண்டில் மக்களுக்கு என்ன தேவை என்பது அவர்களுக்கு தெரியவில்லையா? ஸ்டாலின் நல்லாட்சி தந்திருந்தால் மக்களே உங்கள் ஆட்சி தொடரட்டும் என்பார்கள். அதனை நீங்கள் சொல்ல வேண்டியதில்லை.தி.மு.க, அ.தி.மு.க ஆகிய 2 கட்சிகள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கிறோம் என்கிறார்கள். மக்களின் குறைகள் என்னவென்றே தெரியாமல் தான் இதுநாள் வரை ஆட்சி நடத்தியுள்ளனர்
நாங்கள் எப்போதும் தனித்தே பயணிக்கிறோம். எங்களது இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். 4 முறை பொதுத்தேர்தலில் நின்று தோற்றிருக்கிறோம். ஆனாலும் மீண்டும், மீண்டும் உற்சாகத்தோடு பணியாற்றி வருகிறோம். நாங்கள் 100 சதவீதம் மக்களை நேசிக்கிறோம்.மக்களையும், தன்னையும் நம்பாதவர் தான் 2 தொகுதிகளில் போட்டியிடுவார். 2 முறை தேர்தலில் தோற்ற நான் தொடர்ந்து ஒரு தொகுதியில் மட்டுமே மீண்டும் களம் காண்கிறேன்.
காரணம் மக்கள் மீதுள்ள நம்பிக்கை. நான் வெற்றி பெறுவேன் என்று என்மீதுள்ள நம்பிக்கை. தேர்தல் பத்திரத்தின் மூலம் அதிகம் பணம் பெற்றது பா.ஜனதாவும், தி.மு.க.வும் தான். ஒரு ரூபாய் கூட வாங்காத கட்சி தான் நாம் தமிழர் கட்சி” என்றார்.