முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் ப.சிதம்பரம்

காங்கிரசின் பலத்தை த.வெ.க. அங்கீகரிக்கிறது என்ற அதிரடி கருத்தை கிரிஷ் சோடங்கர் கூறினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் ப.சிதம்பரம்
Published on

சென்னை,

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 1947 முதல் 1967 வரை தொடர்ச்சியாக 20 ஆண்டுகள் தேசிய கட்சியான காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. பின்னர் காங்கிரசிடம் இருந்த ஆட்சி அதிகாரத்தை திராவிட கட்சி கள் கைப்பற்றி மாறி, மாறி ஆட்சி நடத்தி வருகின்றன.

கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது சோனியாகாந்தி உருவாக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரசுடன் தி.மு.க. கை கோர்த்தது. அன்று முதல் இன்று வரை 22 ஆண்டுகளாக (2014 நாடாளுமன்ற தேர்தல் தவிர்த்து) இந்த கூட்டணி நீடித்து வருகிறது.

2011 சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கியது. 2016 சட்டமன்ற தேர்தலின் போது இந்த எண்ணிக்கை சற்று குறைந்து 41 ஆனது. 2021-ம் சட்டமன்ற தேர்தலில், கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களம் காண்கிறது. த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரம் அளிக்கப்படும் என்று விஜய் அதிரடியாக அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது.

காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 'தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு தர வேண்டும்' என்று வெளிப்படையாக அறிவித்தார். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பது தி.மு.க.வின் கொள்கை முழக்கமாக இருந்து வருகிறது.

கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டுக்கு சரிபட்டு வராது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். இதையடுத்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நிலைப்பாட்டில் இருந்து கிரிஷ் சோடங்கர் பின்வாங்கினாலும், காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தபட்சம் 35 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்து வருகிறார்.

தி.மு.க.வுடன் நடைபெற்ற தொகுதி பங்கீட்டில் இதை அவர் வலியுறுத்தி னார். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் மட்டும் ஒதுக்க முடி யும் என்று தி.மு.க. தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிருப்தியடைந்த கிரிஷ் சோடங்கர் டெல்லியில் நேற்றுமுன்தி னம் அளித்த பேட்டியில், 'தி.மு.க. கூட்டணியில் 25 இடங்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம்' என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் காங்கிரசின் பலத்தை த.வெ.க. அங்கீகரிக்கிறது என்ற அதிரடி கருத்தையும் கூறினார்.

இதேபோல், திமுகவில் உள்ள 4 இடங்களில், திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மீதமுள்ள 3 இடங்களை காங்கிரஸ், தேமுதிக, மதிமுக ஆகியவை கேட்டு வருகின்றன. திமுகவிலும் பலர் கேட்பதால் திமுகவிலும் இழுபறி நிலை நீடிக்கிறது.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று பகல் 12.30 மணியளவில் சந்திக்கிறார். திமுக - காங்கிரஸ் இடையே நடந்த முதற்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், இந்த சந்திப்பில் சுமுக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com