தவெகவுக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் ஆதரவு

2026ல் விஜய் ஆட்சிக்கு வர வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சி என்பதற்காகவே விஜய்யை ஆதரிக்கிறோம் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சி நிர்வாகி பேசியுள்ளார்.
தவெகவுக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் ஆதரவு
Published on

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். எம்.ஜி.ஆர் அதிமுக என்ற கட்சியை பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய நிலையில், விஜய் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக பண்ருட்டி ராமச்சந்திரனின் கட்சி நிர்வாகி பேசியுள்ளார். இது தொடர்பாக எம்.ஜி.ஆர் அதிமுக பொதுச்செயலாளர் ரஞ்சித்குமார் பேசுகையில், 2026ல் விஜய் ஆட்சிக்கு வர வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சி என்பதற்காகவே விஜய்யை ஆதரிக்கிறோம்” என்று பேசியுள்ளார்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com