கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்யும் பிரேமலதா..!

விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.
கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்யும் பிரேமலதா..!
Published on

சென்னை,

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 10 சட்டமன்ற தொகு திகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த 10 சட்டமன்ற தொகுதிகள் எவை எவை என்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், தி.மு.க. சார்பில் தே.மு.தி.க.வுக்கு விருத்தாசலம், தர்மபுரி, சேலம் (மேற்கு), விருதுநகர், ஓமலூர், மயிலம், பல்லாவரம், திருத்தணி, குடியாத்தம் (தனி), போளூர் ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இதனைதொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் தே.மு.தி.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் விருத்தாசலத்தில் பிரேமலதாவும், விருதுநகரில் விஜயபிரபாகரனும் போட்டியிடுகிறார்கள். தர்மபுரியில் அவைத்தலைவர் வி.இளங்கோவன், சேலம் (மேற்கு) கொள்கைப்பரப்பு செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், மயிலம் தொகுதியில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

இதற்கிடையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6-ந்தேதி கடைசி நாளாகும். வேட்புமனு தாக்கல் செய்ய மொத்தம் அவகாசம் குறைவாக இருப்பதால் முதல் நாளே வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடைசி நாளில் (அதாவது 6-ந்தேதி) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைபோல தேமுதிக சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களும் அன்றைய நாளில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com