பிரதமர் நாளை ஆலோசனை- அண்ணாமலைக்கு அழைப்பு

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்.
பிரதமர் நாளை ஆலோசனை- அண்ணாமலைக்கு அழைப்பு
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நிறைவ டைய சில தினங்களே உள்ள நிலையில், பா.ஜனதா வேட்பா ளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் நீடிக்கிறது. பா.ஜனதா போட்டியிட உள்ள 27 தொகுதிகளிலும் இன்னார், இன்னார் போட்டியிடப் போகிறார்கள் என கட்சிக்காரர் களுக்கு இடையே ஆளாளுக்கு ஒருவரை முன்மொழிந்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

பா.ஜனதாவில் இதுவரை இப்படி நடந்ததில்லை. இது பற்றி தேசிய தலைமைக்கு தகவல்கள் சென்றுள்ளன. இதனால் வேட்பாளர் தேர்வில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா? என்பது பற்றி ஆராய, மத்திய மந்திரியும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் சமீபத்தில் சென்னை வந்து சென்றார். அப்போது ஒரு உத்தேச பட்டியலை தயார் செய்து அவர் டெல்லிக்கு எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

டெல்லியில் இந்த பட்டியல் ஆழமாக பரிசீலிக்கப்பட்டு இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக தெரிகிறது. அதை எடுத்துக் கொண்டு பியூஷ் கோயல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சென்னை வர இருப்பதாகவும், அந்த பட்டியலை மாநில நிர்வாகிகளிடம் காண்பித்து வெளியிடுவார் எனவும் கூறப்படுகிறது. இதிலும் மாநில நிர்வாகிகள் மாற்றத்தை வலியுறுத்தினால், பட்டியல் இரவு அல்லது நாளை வெளியாகும் எனவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் புதுச்சேரியில் தேசிய கூட்டணி கட்சி தலைவர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று வருகிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி விமான நிலையத்துக்கு மாலை 4.15 மணிக்கு வருகிறார். அங்கு திறந்த வாகனத்தில் 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

அஜந்தா சிக்னல் சந்திப்பில் தொடங்கும் இந்த ரோடு ஷோ நிகழ்ச்சி ராஜா தியேட்டர் சந்திப்பு வரை நடைபெற உள்ளது. ரோடுஷோவை முடித்து விட்டு மீண்டும் புதுச்சேரி விமான நிலையத்திற்கு திரும்பும் அவர் மாலை 5.50 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மீண்டும் சென்னை வருகிறார். அங்கு தங்குகிறார்.

இந்த நிலையில், நாளை பிரதமர் மோடி தலைமையில் பாஜக மையக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறும் கூட்டத்தில் பாஜக முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்திற்கு முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நடத்தும் கூட்டத்தில் முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்டாயம் பங்கேற்க வேண்டும் என கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது. கேரளாவில் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அண்ணாமலை இன்று இரவு சென்னை திரும்புகிறார்.

அண்ணாமலையை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட கட்சி மேலிடம் வலியுறுத்துவதாகவும், ஆனால் அவர் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பதாகவும் பா.ஜ.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த சூழ்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்த நிலையில் பிரதமர் ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com