புதுச்சேரி சட்டசபை தேர்தல்: ஏப்ரல் 3-ந் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் ரோடு ஷோ

புதுச்சேரியில் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 24-ந் தேதி நடைபெற்றது.
புதுச்சேரி சட்டசபை தேர்தல்: ஏப்ரல் 3-ந் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் ரோடு ஷோ
Published on

புதுச்சேரி சட்டசபை தேர்தல்: ஏப்ரல் 3-ந் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் ரோடு ஷோ

புதுச்சேரியில் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 24-ந் தேதி நடைபெற்றது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 16-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி நிறைவடைந்த நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 24-ந் தேதி நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் 30 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நாளை (வியாழக்கிழமை) மாலை வெளியிடப்பட இருக்கிறது.

இந்த நிலையில், புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி ஏப்ரல் 3-ந் தேதி புதுச்சேரி வர இருக்கிறார். அங்கு நடைபெறும் பிரமாண்ட ரோடு ஷோவில் அவர் பங்கேற்று பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

இதேபோல், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின், முன்னாள் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் அடுத்தடுத்து தேர்தல் பிரசாரத்திற்காக புதுச்சேரி வர இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com