

சென்னை,
தமிழ்நாடு முழுவதும் வருகிற 21-ம் தேதி (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இன்று பிறை தெரியாததால் நாளை மறுதினம் ரம்ஜான் கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பண்டிகை அறிவிப்பால், சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த வேட்பாளர்கள் நேர்காணல் திங்கட்கிழமை நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் “தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு போட்டியிட விரும்பி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் ஏற்கனவே 21-3-2026 சனிக்கிழமை அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த மாவட்டங்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஒத்திவைக்கப்பட்டு, 23-3-2026 (திங்கட்கிழமை) அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது.
23-ம் தேதி காலை 9.00 மணி (திருச்சி வடக்கு, திருச்சி மத்திய,திருச்சி தெற்கு, தஞ்சை வடக்கு தஞ்சை தெற்கு, தஞ்சை மத்திய பெரம்பலூர் அரியலூர்)
23-ம் தேதி 4.00 மணி (புதுக்கோட்டை வடக்கு. புதுக்கோட்டை தெற்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர்). இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.